கடலூர்
கடலூர்
கடலூர் | |
— சிறப்பு நிலை நகராட்சி — | |
அமைவிடம் | அமைவு: |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கடலூர் |
ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] [2] |
முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[3] [4] [5] |
மாவட்ட ஆட்சியர் | v. அமுதவள்ளி [6] |
நகராட்சிதலைவர் | சி.க.சுப்ரமணியன் |
சட்டமன்றத் தொகுதி | கடலூர் |
சட்டமன்ற உறுப்பினர் | மு. சி. சம்பத் (அதிமுக) |
மக்கள் தொகை | 1,58,569 (2001) |
நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
பரப்பளவு • உயரம் | • 1 மீட்டர் (3.3 அடி) |
பொருளடக்கம்[மறை] |
[தொகு] சொற்தோற்றம்
முற் காலத்தில் கடலூர், கூடலூர் என்று அழைக்கபட்டது. பெண்ணையாறு, கெடிலம், பரவனாறு ஆகிய மூன்று ஆறுகள் கடலில் கலக்கும் இடம் ஆதலால் இப்பெயர் பெற்றது. பிரித்தானிய ஆட்சி காலத்திலிருந்து இது கடலூர் என்று அழைக்கபட்டது, கி.பி. 1746ஆம் ஆண்டில் பிரித்தானியரின் தென்னிந்தியாவுக்கான் தலைமையகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.[தொகு] வரலாறு
இந்தியாவுக்கு வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் செஞ்சியை ஆண்ட மன்னர்களிடம் இருந்து கடலூரில் இருந்த புனித டேவிட் கோட்டையைக் வாங்கினார்கள். சென்னை புனித ஜார்ஜ் கோட்டையை பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றிய போது புனித டேவிட் கோட்டைக்கு தங்கள் மாகாணத் தலைநகரை மாற்றி இந்தியாவின் தென் பிராந்தியத்தை இந்தக் கோட்டையில் இருந்து ஆண்டு வந்தார்கள். ஆங்கிலேயர்கள் தங்கள் நாட்டுடனான வாணிபத் தொடர்புகளுக்கு, கடலூர் துறைமுகத்தை அதிக அளவில் பயன்படுத்தியதாக சரித்திரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன,கடலூரில், கடலூர் முதுநகர் மற்றும் கடலூர் புதுநகர் என இரண்டு முக்கிய பகுதிகள் உள்ளன. 1866 வரை நகராட்சி அலுவலகம் போன்ற அரசு அலுவலகங்கள் முதுநகர் பகுதியிலேயே இருந்தன. 1866க்கு பிறகு அவை புதுநகர் பகுதியில் உள்ள மஞ்சகுப்பம் எனப்படும் இடத்திற்கு மாற்றப்பட்டது.
பண்டைய வரலாறுப்படி இவ்வூர் திருப்பாதிரிப்புலியூர் என அழைக்கப்பட்டது.[மேற்கோள் தேவை]
சரித்திரக் குறிப்புகள் படி இவ்வூர் சோழர் , பல்லவர் , முகலாயர் மற்றும் ஆங்கிலேயர் ஆகியோரால் ஆட்சி செய்யப்படுள்ளது. பாரம்பரியப்படி சைவ சமயக் கோட்பாடுகள் இங்கு பின்பற்றப்படுவதன் மூலம் சோழர்கள் இப்பகுதியை ஆட்சி செய்துள்ளது புலனாகிறது.
[தொகு] ஆங்கிலேய ஆட்சி
ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இவ்வூர் ஒரு முக்கிய பங்கு வகித்ததனால் இங்கு சில தெரு மற்றும் ஊர் பெயர்களில் ஆங்கிலப் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.- புரூக்கீச் பேட்டை : 1767 முதல் 1769 வரை இவ்வூரை ஆட்சி செய்த ஹென்ரி ப்ரூக்கர் எனும் ஆங்கிலேயர் பெயர் வைக்கப்பட்டுள்ளது
- கமியம் பேட்டை : 1778 களில் இவ்வூரை ஆட்சி செய்த வில்லியம் கம்மிங் என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
- கேப்பர் மலை : 1796 களில் ஆங்கில படைத்தளபதியாக விளங்கிய ப்ரான்சீச் கேப்பர் அவர்களை முன்னிட்டு பெயர் என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
- வெலிங்டன் தெரு : ஆங்கில ஆட்சியாளராக விளங்கிய வெலிங்டன் துரை என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
- கிளைவ் தெரு : ஆங்கில ஆட்சியை பாரத தேசத்தில் நிருவிய ராபர்ட் கிளைவ் என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
[தொகு] புவியியல்
இவ்வூரின் அமைவிடம் ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 1 மீட்டர் (3 அடி) உயரத்தில் இருக்கின்றது.[தொகு] மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 158,569 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[8] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். கடலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கடலூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.[தொகு] போக்குவரத்து
கடலூர் தொடருந்து மற்றும் சாலை மூலமாக பெரு நகரங்களுடன் நன்கு இணைக்கபட்டுள்ளது.[தொகு] தொடருந்துப் போக்குவரத்து
கடலூர் இரண்டு ரயில் நிலையங்கள் உள்ளன.தென்னக இரயில்வேயின் மெயின் லைன் எனப்படும் சென்னை, விழுப்புரம், மயிலாடுதுறை, திருச்சி ரயில் பாதையில் கடலூர் உள்ளது . இப்பாதை பயணிகள் போக்குவரத்துக்கு 1877 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. கடலூர் துறைமுகம் சந்திப்பில் இருந்து விருத்தாசலம் வழியாக சேலத்திற்கு ஒரு ரயில் பாதை உள்ளது.
[தொகு] சாலைப் போக்குவரத்து
கடலூர் நல்ல ரயில் மற்றும் சாலை வலைப்பின்னல் மூலமாக இணைக்கப்பட்டிருக்கும் நகரமாகும். புதுச்சேரி , சிதம்பரம், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் போன்ற அருகிலுள்ள நகரங்களில் செல்ல அடிக்கடி பேருந்துகள். தமிழ்நாட்டில் சென்னை, திருச்சிராப்பள்ளி, Salem போன்ற முக்கிய நகரங்கள செல்ல அடிக்கடி பேருந்துகள்சாலை வழியாக அனைத்து மாவட்டத்தின் பெரு நகரங்களுடன் இணைக்கபட்டுள்ளது. கடலூரில் இருந்து மூன்று மாநில நெடுஞ்சாலைகள் துவங்கி பிற நகரங்களை சென்று அடைகின்றன, அவை
- எஸ்.எச்.9 - கடலூர் சித்தூர் சாலை (கடலூர் - நெல்லிக்குப்பம் - பண்ருட்டி - திருகோவிலூர் - திருவண்ணாமலை - வேலூர் - காட்பாடி- சித்தூர்)
- எஸ்.எச்.10 - கடலூர் சேலம் சாலை (கடலூர் - வடலூர் - நெய்வேலி - விருத்தாசலம்- வேப்பூர் - சேலம்)
- எஸ்.எச்.68 - கடலூர் - திருவந்திபுரம் - பாலூர் - பண்ருட்டி - அரசூர் -திருக்கோவிலூர் - சங்கராபுரம் சாலை.
[தொகு] கடலூரில் தோன்றிய குறிப்பிடதக்கவர்கள்
- சுப்பராயலு ரெட்டியார் - சென்னை மாகாண முதல் முதலமைச்சர் .
- ஜோதி இராமலிங்க சுவாமிகள் - சிதம்பரம் அருகில் பிறந்தார்.
- என். எஸ். ராமசுவாமி - கடலூரில் பிறந்தார்
- ஹாஜி மஸ்தான் கடலூர் அருகில் பிறந்து மும்பையில் நிழல் உலக தாதா என்று அறியப்பட்டவர்.பின்னர் அரசியலில் இறங்கி தலித் மற்றும் சிறுபான்மை மக்களுக்காக கட்சியையும் துவக்கினார்.பல இந்தி திரைப்படங்களை தயாரித்துள்ளார்.
- ஜெயகாந்தன் - சிறந்த கதாசிரியர், பத்திரிகையாளர் மற்றும் பல விருதுகள் பெற்றவர் .
- கி. வீரமணி - திராவிடர் கழகம் கட்சியின் தலைவர் மற்றும் பெரியார் மணியம்மை பல்கலைகழகத்தின் துணை வேந்தர் .
- ஆர்க்காடு சகோதரர்கள் என்று அழைகபடும் ஆற்காட் ராமசாமி மற்றும் ஆற்காட் கிருஷ்ணசாமி கடலூரில் பிறந்து வாழ்ந்து வந்தார்கள் .
- C.K. ரங்கநாதன் - வியாபார துறையில் கொடிகட்டி வாழ்பவர்
- வி. வைத்திலிங்கம் - புதுவை மாநிலத்தின் முதலமைச்சர்
- நீதிபதிகள் K . கண்ணன், R. பாலசுப்ரமணியம், K.சம்பத்.
- கலைமாமணி கடலூர் எம். சுப்ரமணியம் (1920-1997)
- கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்
- எஸ். பாலாஜி, ஆர். ராம்குமார் கிரிக்கெட் வீரர்கள்
- Peter Tranchell (1922 - 1993 ) பிரிட்டிஷ் இசை அமைப்பாளர்
- கடலூர் மாவட்ட முதல் இஸ்லாமிய தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் ஜனப் கி கிலால் அவர்கள்
[தொகு] கடலூர் துறைமுகம்
200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கடலூர் இயற்கைத் துறைமுகம், இந்தியாவுக்கு வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்களின் முதல் தலைநகரமாக விளங்கியது.தங்கள் நாட்டுடனான வாணிபத் தொடர்புகளுக்கு, கடலூர் துறைமுகத்தை அதிக அளவில் பயன்படுத்தியதாக சரித்திரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. பரங்கிப்பேட்டையில் இருந்த இரும்பு உருக்கு ஆலைகளில் தயாரிக்கப்பட்ட இரும்புத் தளவாடங்கள் , கடலூர் துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் மூலம் இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்டன. சுதந்திரத்துக்குப் பின் கடலூர் துறைமுகத்தில் இருந்து, சேலத்தில் வெட்டி எடுக்கப்பட்ட இரும்புக் கனிமங்கள், வெள்ளைக் கற்கள் போன்றவை கப்பல்கள் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.1985 வரை 150 ஊழியர்களுடன் இத்துறைமுக அலுவலகம் செயல்பட்டது. 500 சரக்கு விசைப் படகுகளுடன், சுமார் 1 லட்சம் தொழிலாளர்களுக்கும், இங்கு வேலைவாய்ப்பு இருந்தது. தற்போது 7 ஊழியர்களுடன் இயங்கிக் கொண்டு இருக்கிறது.
கடலூர் துறைமுகம் தவிர பல துறைமுகங்கள் கடலூர் மாவட்டத்தில் உள்ளன.அவை வருமாறு
- திருச்சோபுரம் துறைமுகம்
- சிலம்பிமங்களம் துறைமுகம்
- பரங்கிபேட்டை துறைமுகம்
- PY-03 எண்ணெய் புலம் துறைமுகம்
[தொகு] சுற்றுலா தலங்கள்
- வெள்ளி கடற்கரை (கடலூர்)
- செயிண்ட் டேவிட் கோட்டை
- பாடலீஸ்வரர் கோயில்
- திருவந்தீபுரம் சுவாமி கோயில்
- திருவந்தீபுர ஹையக்றேவேர் கோயில்
- நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்.எல்.சி) நெய்வேலி
- சிதம்பரம் நடராஜர் கோயிலில்
- பிச்சாவரம், உலகின் மிகப்பெரிய மாங்கிரோவ் காடுகள்
- திருமுடம் பூவராக சுவாமி கோயில்
- வடலூர் வள்ளலார் சத்ய ஞான சபை
- குறிஞ்சிபடி சுப்றை சுவாமிகள் கோயில்
- வேங்கடம்பெட் வேனுகோபல சுவாமி கோயில்
- திருவதிகை வீரடநேச்வர் கோயில்
[தொகு] கல்வி
கடலூரில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள் பல உள்ளன.[தொகு] பொறியியல் கல்லூரிகள்
- அண்ணா பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளி - பண்ருட்டி வளாகம்
- டாக்டர். நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரி
- கிருஷ்ணசாமி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
- எம்.ஆர்.கே இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி
- ஸ்ரீ ஜெயராம் பொறியியல் கல்லூரி
- செயின்ட் ஆணிஸ் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி
[தொகு] கலை அறிவியல் கல்லூரிகள்
- ஏரிஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- பி. பத்மனாப ஜெயந்திமாலா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- சி.கந்தசாமி நாயுடு பெண்கள் கல்லூரி
- அரசு கலைக் கல்லூரி,கடலூர்
- ஜவஹர் அறிவியல் கல்லூரி
- கிருஷ்ணசுவாமி அறிவியல், கலை மற்றும் மேலாண்மை மகளிர் கல்லூரி
- பெரியார் கலைக் கல்லூரி
- ஸ்ரீ ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- ஸ்ரீ ஆறுமுகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- ஸ்ரீ தங்கம் பெரியசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- புனித ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- திரு கொலஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி
- திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
[தொகு] பள்ளிகள்
- புனித ஜோசப் பள்ளி
- புனித சவேரியர் நடுநிலை பள்ளி
- புனித பிலோமினால் நடுநிலை பள்ளி
புனித அன்னாள் பெண்கள் பள்ளி
[தொகு] வெள்ளி கடற்கரை
கடலூரிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கடற்கரையில் நூற்றாண்டு கண்ட கலங்கரை விளக்கம் உள்ளது. அடர்ந்த மாங்குரோவ் காடுகள் அமைந்துள்ளன. வெள்ளி கடற்கரை பகுதியில் பிரிட்டிஷ் உருவாக்கிய முக்கிய கோட்டை செயிண்ட் டேவிட் உள்ளது. பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இந்த கடற்கரை அருகே அமைந்துள்ளது[தொகு] தொழில்
- நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன்
- நாகார்ஜூனா ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனம்
- குட் எர்த் கப்பல் கட்டுமான துறைமுகம்
- ஹார்டி மத்திய கடல் எண்ணெய் வயல்
[தொகு] ஆதாரங்கள்
- ↑ http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
- ↑ http://india.gov.in/govt/governor.php
- ↑ http://www.tn.gov.in/gov_cm.html
- ↑ http://www.tn.gov.in/seithi_veliyeedu/pressphoto.php?id=1879
- ↑ http://india.gov.in/govt/chiefminister.php
- ↑ http://tnmaps.tn.nic.in/default.htm?coll_all.php
- ↑ "Cuddalore". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 18, 2006.
- ↑ "இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு". பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 18, 2006.
- கடலூர் புகைப்படங்கள்
Labels: District History
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home