திருச்சிராப்பள்ளி
திருச்சிராப்பள்ளி
திருச்சி வரலாறு

வரலாறு, மொழி, கலை, இலக்கியம், ஆன்மீகம், வேளாண்மை, பண்பாடு, பழமை, செழுமை, இயற்கை ஆகிய அனைத்து பெருமைகளையும் உடையது தமிழகம். இத்தகைய பெருமைமிகு தமிழகத்துக்கு பெருமை சேர்ப்பது மாநிலத்தில் மத்தியில் உள்ள திருச்சி மாவட்டம் என்றால் அதுமிகையாகாது. திருச்சி மாவட்டம் சுற்றுலாச் சிறப்புகள் பெற்ற தனிப்பெருமை கொண்டதாகும். தமிழகத்தின் சுற்றுலா பெருமைகளில் தனித்தன்மை வாய்ந்த திருச்சி மாவட்டம் புனிதநதி காவிரிக்கரையில் அமைந்த தொன்மையான நகரம். பல்லவ மற்றும்சோழ மன்னர்கள் திருச்சியை ஆட்சிபுரிந்துள்ளனர். இங்கு கோயில் கட்டிடக்கலையும், எழில் நிறைந்த கோபுரங்களும், சிற்பங்களும், இயற்கை வனப்பும் நிறைந்துள்ளது.
கி.மு. 300ம் ஆண்டு முதல் உறையூர் சோழர்களின் தலைநகரமாக இருந்தது. உறையூர், தற்போதைய திருச்சி நகரின் ஒரு பகுதியாகும். கி.பி. 300 முதல் 575 வரை உறையூர் சோழர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் கி.பி. 590ம் ஆண்டில் உறையூர், திருச்சிராப்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் முதலாம் மகேந்திர வர்ம பல்லவரின் கட்டுப்பாட்டிற்கு வந்தது. கி.பி. 880ம் ஆண்டு வரை உறையூர் பல்லவர்கள் மற்றும் பாண்டியர்களின் கையில் இருந்தது. கி.பி. 880க்கு பின் ஆதித்ய சோழர் பல்லவர்களை வீழ்த்தி உறையூரை மீட்டார்.
அதன் பின்னர் திருச்சிராப்பள்ளி மற்றும் பிற பகுதிகளும் சோழநாட்டுடன் இணைக்கப்பட்டது. கி.பி.1225ல் இந்த பகுதி மீண்டும் ஹொய்சாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. தொடர்ந்து முகலாயர் வருகை வரை பாண்டியர்கள் வசம் இருந்தது.
திருச்சிராபள்ளி சிலகாலம் முகலாயர்கள் வசமும் இருந்தது. பின்னர் விஜயநகர பேரரசர்கள் வசம் மாறியது. கி.பி.1736 வரை விஜயநகர பேரரசின் பாதுகாவலர்களான நாயக்கர்கள் இந்த பகுதியை ஆண்டனர். தற்போது திருச்சியில் <உள்ள தெப்பகுளம் மற்றும் கோட்டை விஸ்வநாத நாயக்கரால் கட்டப்பட்டதாகும். ஆங்கிலேயர்களின் உதவியோடு முஸ்லிம்கள் திருச்சியில் ஆட்சி செலுத்தினர். சந்தா சாகிப், முகமது அலி ஆகியோர் சில காலம் திருச்சியை ஆண்டனர். இறுதியில் திருச்சி முழுமையாக ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டிற்கு வந்தது. சுமார் 150 ஆண்டுகள் அதாவது சுதந்திரம் கிடைக்கும் வரை ஆங்கிலேயர்கள் இங்கு ஆட்சி செலுத்தினர்.
திருச்சி நகரம் சோழர்களின் அரணாக விளங்கியது. திருச்சி பல்லவர்கள் கையில் இருந்த போது அதை தக்க வைக்க கடும் முயற்சி செய்தனர். இருந்தும் பாண்டியர்கள் பலமுறை திருச்சியை கைப்பற்றினர். இறுதியில் 10ம் நூற்றாண்டில் திருச்சி சோழர்கள் வசம் வந்தது. விஜயநகர பேரரசிற்கு பின் திருச்சி, மதுரையை ஆண்ட நாயக்கர்கள் கைப்பற்றினர். தொடர்ந்து மராட்டியர்கள், கர்நாடக நவாப்கள், பிரெஞ்ச் ஆதிக்கம், மற்றும் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தனர். ஆனால் நாயக்கர்கள் ஆட்சியின் போது திருச்சி நல்ல முன்னேற்றம் அடைந்தது. திருச்சி மாநகரம் மலை கோட்டையை சுற்றி அமைந்துள்ளது. மலை கோட்டையை தவிர சர்ச்கள், கல்லூரிகள், மற்றும் சமுதாய நல அமைப்புகள் பல 1760ம் ஆண்டுகளிலேயே அமைப்பட்டுள்ளது. சிறந்த உட்கட்டமைப்பு கொண்ட நகரமான திருச்சி தமிழகத்தின் முக்கிய நகரமாக விளங்குகிறது.
திருச்சி நகரம் காவிரி கரையில் அமைந்துள்ளது. தமிழகத்தின் நான்காவது பெரிய நகரமாக திருச்சி விளங்குகிறது. திருச்சி தமிழகத்தின் மைய பகுதியில் அமைந்துள்ளது. திருச்சி மாநகராட்சி திருச்சி நகரை மையமாக கொண்டு செயல்படுகிறது. திருச்சி, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ தலமாகும். பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான திருவானைக்காவல் இங்கு தான் உள்ளது. திருவானைக்காவல் நீருக்கான ஸ்தலமாகும். நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி. ராமன் திருவானைக்காவலில் தான் பிறந்தார். அவருடைய வீடு அருங்காட்சியகமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
திருச்சியில் பல வரலாற்று சிறப்பு மிக்க கோயில்கள், சர்ச்கள், மசூதிகள் உள்ளன. கரிகால சோழ மன்னனால் காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட கல்லணை இன்றும் சோழர்களின் பெருமையை பறைசாற்றி கொண்டிருக்கிறது. திருச்சியின் முக்கிய இடமாக மலை கோட்டை கருதப்படுகிறது. 83 மீட்டர் உயரத்தில் இந்த கோட்டை அமைந்துள்ளது. இதனால் திருச்சி மலை நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மலையின் மீது உச்சி பிள்ளையார் கோயில் உள்ளது. இந்த கோயில் நாயக்கமன்னர்களின் ராணுவ அரணாகவும் விளங்கியது. பல்லவர்கள் ஆட்சியின் போது இந்த மலையை குடைந்து குகை கோயில்களை அமைத்தனர். இந்த மலைகோயில் தற்போது சத்திரம் என அழைக்கப்படும் பரபரப்பான வர்த்தக இடமாக மாறிவிட்டது. இந்தியாவிலேயே திருச்சியில் அதிக எண்ணிக்கையிலான சர்ச்கள் உள்ளன. ஹோலி ரீடீமெர்ஸ் சர்ச், லூர்து சர்ச், தி கதீட்ரல் சர்ச் ஆகியவை மிக முக்கியமானதாகும்.
பெயர் காரணம்:
திருச்சிராபள்ளி என்ற பெயர் ஏற்பட்டதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. திரு என்பது தமிழில் மரியாதையை குறிக்கும் சொல். சிரா என்பது ஜைன துறவியின் பெயராகும். இதனால் திருச்சிராப்பள்ளி என்ற பெயர் ஏற்பட்டதாகவும், மூன்று தலை கொண்ட திரிசிரா (ராவணனின் மகன்) சிவனை வழிபட்டு தன் பாவத்தை போக்கிய தலம் என்பதால் இந்த பெயர் வந்தது என்றும் கூறப்படுகிறது. திரு செவ்வந்திபுரம் என்ற பெயர் நாளடைவில் மருவி திருச்சி என்று அழைக்கப்பட்டதாகவும் கூறுவர்.
திருச்சிராப்பள்ளி | |
— மாநகரம் — | |
| |
| |
அமைவிடம் | அமைவு: |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ் நாடு |
மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
ஆளுநர் | கொனியேட்டி ரோசையா |
முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா |
மாநகராட்சித் தலைவர் | எஸ். சுஜாதா |
மக்கள் தொகை • அடர்த்தி | 7,52,066 (2001) • 5,338 /km2 (13 /sq mi) |
நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
பரப்பளவு | 140.90 ச.கி.மீs (54.40 sq mi) |
இணையதளம் | www.trichycorporation.gov.in |
திருச்சிராப்பள்ளி (ஆங்கிலம்:Tiruchirappalli), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ளது திருச்சிராப்பள்ளி ; இது ஒரு மாவட்டத் தலைநகர் ஆகும்; மேலும் இது உள்ளாட்சி அமைப்பில் மாநகராட்சி எனும் தகுதி பெற்றது. காவிரி நதிக் கரையில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி தமிழகத்தில் உள்ள நான்கு முக்கியமான நகரங்களில் ஒன்றாகும். இதைப் பொதுவாக திருச்சி என்று சுருக்கமாக அழைக்கிறார்கள். திருச்சிராப்பள்ளி என்பதன் பொருளானது, திரு - சிராய் - பள்ளி, அதாவது சிராய் (சிராய் என்பது பாறை என்று பொருள்படும்) பள்ளி கொண்ட இடம். பிரசித்தி பெற்ற மலைக் கோட்டை இந்தப் பாறையின் மேலேயே அமைந்து உள்ளது.
பொருளடக்கம்[மறை] |
[தொகு] பெயர்க் காரணம்
'திரிசிரன்' என்ற பெயருடைய அரக்கன், மூன்று சிரங்களைக் கொண்டவன். அவ்வரக்கன் இவ்வூரில் பூசித்ததனால் திருச்சிராப்பள்ளி என்னும் பெயர் ஏற்பட்டது. இது தென்னாட்டுக் கைலை மலை என்றும் புகழப்படுவது. திருச்சி மலைக்கோட்டையில் காணப்படும் குகையில் 'சிரா' என்னும் பெயருடைய சமணத் துறவி தங்கியிருந்து தவமிருந்ததாக அக்குகையில் உள்ள பதினோராம் நூற்றாண்டுக் கல்வெட்டு கூறுகிறது. சிரா துறவியின் பள்ளி, சிராப்பள்ளி என்றாகி அதுவே இவ்வூருக்குப் பெயராகி உள்ளது என்றும் கருதப்படுகிறது.[தொகு] மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்நகரின் மக்கள்தொகை: 746,062 ஆகும். .[1] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திருச்சிராப்பள்ளி மக்களின் சராசரி கல்வியறிவு 83% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 80% ஆகும். இது இந்தியத் தேசிய சராசரிக் கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. திருச்சிராப்பள்ளி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.[தொகு] நகர நிர்வாகம்
திருச்சிராப்பள்ளி மாநகரம் 60 பகுதிகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திற்கும் 15 பகுதிகள் வீதம் பொன்மலை, அபிஷேகபுரம், ஸ்ரீரங்கம், அரியமங்கலம் என நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இங்கு மாநகராட்சித் தலைவர் (மேயர்) தலைமையிலான மாநகர்மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின் அடிப்படையில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம், பொது சுகாதாரம் பேணுதல், சாலைகள் பராமரிப்பு, மழைநீர் வடிகால், தெரு விளக்குகள் போன்ற இன்றியமையாத அடிப்படை வசதிகளை (மாநகராட்சிப் பணிகள்) மாநகராட்சி ஆணையரின் வழியாக, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களால் செயல்படுத்தப்படுகிறது.[தொகு] திருத்தலங்கள்
- அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோயில், திருச்சி மலைக் கோட்டை, திருச்சி
- அருள்மிகு உச்சிப் பிள்ளையார் திருக்கோயில், மலைக்கோட்டை, திருச்சி
- அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம்
- அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம்
- அருள்மிகு வெக்காளி அம்மன் திருக்கோயில், உறையூர்
- அருள்மிகு சம்புகேசுவரர் திருக்கோயில், திருவானைக்கா
- அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில், வயலூர்
- அருள்மிகு பஞ்சவர்ண சுவாமி திருக்கோயில், உறையூர்
- அருள்மிகு ஆம்ரனேஸ்வர சுவாமி திருக்கோயில் மாந்துறை
- அருள்மிகு உத்தமர் கோயில்
- அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயில் குணசீலம்
[தொகு] சுற்றுலாத் தலங்கள்
- மலைக்கோட்டை
- ஸ்ரீரங்கம்
- திருவானைக்கோவில்
- முக்கொம்பு
- கல்லணை
- வயலூர் முருகன் கோயில்
- கங்கை கொண்ட சோழபுரம்
[தொகு] கல்லூரிகள்
திருச்சியில் 30க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன.[தொகு] கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- ஜமால் முகம்மது கல்லூரி
- நேரு நினைவுக் கல்லூரி, புத்தனாம்பட்டி
- பிஷப் ஹீபர் கல்லூரி
- தூய வளனார் கல்லூரி (இது சென்னைப் பல்கலைக்கழகத்தினின்றும் பழமையானதாகும்)
- ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரி
- உருமு தனலட்சுமி கல்லூரி
- ஏ. ஏ. அரசு கலைக்கல்லூரி
- கலைக் காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- காவேரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- கிருத்துராஜ் கல்லூரி
- சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி
- செட்டிநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- தூய சிலுவைக் கல்லூரி
- தேசியக் கல்லூரி
- பெரியார் ஈ.வே.ரா. கல்லூரி
- ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி
- தனிநாயகம் அடிகள் இதழியல் கல்லூரி
[தொகு] சட்டக் கல்லூரி
- அரசு சட்டக் கல்லூரி,திருச்சிராப்பள்ளி.
[தொகு] பொறியியல் கல்லூரி
- தேசிய தொழில்நுட்பக் கழகம் (முன்பு மண்டலப் பொறியியற் கல்லூரி)
- ஜெயராம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
- ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரி
- சாரநாதன் பொறியியல் கல்லூரி
- ஜெ. ஜெ. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
- திருச்சி பொறியியல் கல்லூரி
- MAM பொறியியல் கல்லூரி
[தொகு] வேளாண்மைக் கல்லூரி
- அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
[தொகு] பள்ளிகள்
- திருவரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி (The Higher Secondary School for Boys, Srirangam)
- ஈ.ஆர். மேனிலைப் பள்ளி
- பிசப் ஈபர் மேனிலைப்பள்ளி
- ஈ.வே.ரா. மேனிலைப்பள்ளி
- புனித சிலுவைப் பெண்கள் மேனிலைப்பள்ளி
- புனித வளனார் மேனிலைப்பள்ளி
- தேசிய மேனிலைப்பள்ளி
- கேம்பியன் மேனிலைப்பள்ளி
- ஆர்.சி. மேல்நிலைப்பள்ளி
- காஜா மியான் மேனிலைப்பள்ளி
[தொகு] விக்கிக்காட்சியகம்
Labels: District History
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home