கொடைக்கானல்
கொடைக்கானல்
கொடைக்கானல் | |
— சிறப்பு நிலை நகராட்சி — | |
அமைவிடம் | அமைவு: |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திண்டுக்கல் |
ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] [2] |
முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[3] [4] [5] |
மாவட்ட ஆட்சியர் | |
நகராட்சித் தலைவர் | |
ஆணையர் | |
மக்கள் தொகை • அடர்த்தி | 27,822 (2001) • 3,651 /km2 (9 /sq mi) |
நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
பரப்பளவு • உயரம் | 7.62 ச.கி.மீs (2.94 sq mi) • 249 மீட்டர் (820 அடி) |
இணையதளம் | www.municipality.tn.gov.in/Kodaikanal |
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. இதனால் இங்கு நல்ல குளுமையான தட்ப வெட்பம் நிலவுகிறது. பொதுவாக இந்த மலைக் கூட்டங்களை பழனி மலைகள் என்று அழைப்பார்கள். மலைகளின் இளவரசி என்றும் இதனை அழைப்பவர்கள் உண்டு.
பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் செடிகள் இங்கே பரவலாக வளர்கின்றன. அதனால் இம்மலையில் உள்ள முருகன் கோவிலுக்கு குறிஞ்சி ஆண்டவர் கோயில் என்றே பெயருண்டு. கடைசியாக இந்த மலர்கள் 2006-ஆம் ஆண்டு பூத்தன.
22 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட இந்த மலை வாழிடம் கடல் மட்டத்திலிருந்து 2133 மீட்டர் (6998அடி)உயரத்தில் உள்ளது.
பொருளடக்கம்[மறை] |
[தொகு] சங்ககாலத்தில்
- சங்ககாலத்தில் இதன் பெயர் கோடைமலை. அப்போது அதனை ஆண்ட அரசன் கடியநெடுவேட்டுவன். [6]
- பண்ணி என்பவன் இந்த நாட்டைத் தாக்கி வென்று வேள்வி செய்தான் [7]
[தொகு] மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 32,969 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[8] இவர்களில் 16,805 ஆண்கள், 16,164 பெண்கள் ஆவார்கள். கொடைக்கானல் மக்களின் சராசரி கல்வியறிவு 87.3% ஆகும்.[தொகு] பயணக் குறிப்பு
கொடைக்கானல் செல்ல சென்னை-திருச்சிராப்பள்ளி-மதுரை-திருநெல்வேலி-கன்னியாகுமரி தொடர் வண்டிப் பாதையில், திண்டுக்கல் மற்றும் மதுரைக்கு இடையில் அமைந்துள்ள கொடை ரோடு என்ற ஊரில் இறங்கி அங்கிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கொடைக்கானலுக்கு மகிழுந்து அல்லது பேருந்து மூலம் செல்ல வேண்டும். திண்டுக்கல், மதுரை, தேனி, ஒட்டன்சத்திரம் ஆகிய இடங்களில் இருந்து கொடைக்கானலுக்கு அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மகிழுந்துவில் செல்வோர் கவனத்திற்கு. கொடைக்கானலுக்கு வத்தலக்குண்டு வழியாகவும், பழனி மலை வழியாகவும், பாச்சலூர், தாண்டிக்குடி வழியாகவும் மலைப்பாதைகள் செல்கின்றன. இவற்றுள் வத்தலக்குண்டு வழியே செல்லும் பாதையே சிறந்ததாக உள்ளது.தேனியிலிருந்து மகிழுந்தில் கொடைக்கானல் செல்பவர்கள் பெரியகுளம், தேவதானப்பட்டி தாண்டியவுடன் காட்ரோடு என்ற இடத்தில் கொடைக்கானல் செல்லும் சாலை பிரிவதால் அங்கிருந்தே செல்லமுடியும்.வத்தலக்குண்டு செல்ல வேண்டியதில்லை.அருகில் உள்ள வானூர்தி மையங்கள்
- மதுரை 135 கிலோமீட்டர்
- கோயம்புத்தூர் 170 கிலோமீட்டர்
- திருச்சி 195 கிலோமீட்டர்
- சென்னை 465 கிலோமீட்டர்
[தொகு] சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள்
- பிரையண்ட் பார்க்
- தொலைநோக்கிக் காப்பகம் மற்றும் கோக்கர்ஸ் வாக்
- தூண் பாறைகள்
- குணா குகைகள்
- தொப்பித் தூக்கிப் பாறைகள்
- மதி கெட்டான் சோலை
- பேரிஜம் ஏரி (24 ஹெக்டேர் பரப்புள்ள பெரிய அழகான ஏரி)
- குறிஞ்சி ஆண்டவர் கோயில்
- செட்டியார் பூங்கா
- படகுத் துறை
- சில்வர் நீர்வீழ்ச்சி
- கொடைக்கானலில் தற்கொலை முனை (Suicide Point) எனும் பெயரில் ஒரு இடம் உள்ளது. இந்த இடத்திலிருந்து தற்கொலை செய்து கொண்டவர்கள் அதிகம். தற்போது இந்த இடம் முள்வேலியிடப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தினருகே சென்று பார்வையிட்டு வருபவர்களும் உண்டு.
Labels: District History
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home