Friday, 18 November 2011

இராமேசுவரம்

இராமேசுவரம்http://tawp.in/r/7ie


இராமேசுவரம்
இராமேசுவரம்
இருப்பிடம்: இராமேசுவரம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 9°16′47″N 79°17′59″Eஅமைவு: 9°16′47″N 79°17′59″E
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் இராமநாதபுரம்
ஆளுநர் கொனியேட்டி ரோசையா[1] [2]
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா[3] [4] [5]
மாவட்ட ஆட்சியர்
நகராட்சி தலைவர் அர்ஜுனன்
மக்கள் தொகை 37 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
இராமேசுவரம் அல்லது இராமேஸ்வரம் (Rameshwaram, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

பொருளடக்கம்

 [மறை

[தொகு] சுற்றுலாப் பயணிகள் வருகை

இராமேஸ்வரம் மண்டபம்
இராமேஸ்வரம் மண்டபம்
இது வங்காள விரிகுடாக் கடலின் கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள சிவன் கோயில் இந்து சமயத்தின் ஒரு முக்கிய புனித வழிபாட்டிடமாதலால் பெருமளவிலான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். இங்கு பல தீர்த்தங்கள் ,பல கோவில்கள் அமைந்துள்ளன. புகழ் பெற்ற ஆலயங்களுள் இங்கு உள்ள ராமநாதசுவாமிஆலயமும் ஒன்று. உலகில் மிக நீண்ட பிரகாரம் என்ற பெருமையை இந்த கோவிலுக்கு உண்டு. இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இங்குதான் பிறந்தார்.

[தொகு] தல வரலாறு

ராமன் சீதையை மீட்க ராவணனிடம் போர் புரிந்து கொன்றான்.ராவணனை கொன்ற பாவத்தினை நீங்க ராமன் மணல்களால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்தார்.எனவே ராமனே ஈஸ்வரனை வணங்கியதால் இந்நகருக்கு ராம ஈஸ்வரம் என்று பெயர் ஆனது. மக்கள் இங்கு வந்து தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என நம்புகின்றர்.

[தொகு] பாடல் பெற்ற தலம், ஜோதிர்லிங்க தலம்

இங்கு உள்ள இராமநாதசுவாமி கோவில் பாண்டிய நாட்டில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும். 12 ஜோதிர்லிங்க தலங்களில் இராமேஸ்வரமும் ஒன்றாகும்.

[தொகு] மக்கள் வகைப்பாடு

மீன் பிடிக்க செல்லும் படகுகள்
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 37,968 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[6] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். இராமேஸ்வரம் மக்களின் சராசரி கல்வியறிவு 67% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 62% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இராமேஸ்வரம் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.


Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home