திருநெல்வேலி
திருநெல்வேலி
திருநெல்வேலி | |
| |
அமைவிடம் | அமைவு: |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருநெல்வேலி |
ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] [2] |
முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[3] [4] [5] |
மாவட்ட ஆட்சியர் | |
மாநகர்மன்றத் தலைவர் (மேயர்) | விஜிலா சத்யானந்த் |
சட்டமன்றத் தொகுதி | திருநெல்வேலி |
சட்டமன்ற உறுப்பினர் | நயினார் நாகேந்திரன் (அதிமுக) |
மக்கள் தொகை | 4,11,298 (2001) |
நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
பரப்பளவு • உயரம் | • 47 மீட்டர் (150 அடி) |
பொருளடக்கம்[மறை] |
[தொகு] புவியியல்
இவ்வூரின் அமைவிடம் ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 47 மீட்டர் (154 அடி) உயரத்தில் இருக்கின்றது.[தொகு] மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 411,298 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[7] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். திருநெல்வேலி மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 73% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருநெல்வேலி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.திருநெல்வேலி (அ) நெல்லை நகரம், பொருநை எனப்படும் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. 2000 ஆண்டு பழமை வாய்ந்த இந்த நகரம் பாண்டிய மன்னர்களின் தலைநகரமாக சிலகாலம் செயல்பட்டது. இங்குள்ள நெல்லையப்பர் - காந்திமதி கோவில் [8] மிகவும் பிரசித்தி பெற்றது.
[தொகு] பெயர்க் காரணம்
இந்து பழங்கதைகளின் படி சிவ பெருமான் நெல்லுக்கு வேலியிட்டுக் காத்ததால் இது திருநெல்வேலி எனப்படுகிறது என்ற கருத்து உள்ளது.ஒரு ஏழை விவசாயி இறைவனுக்கு படைக்க நெல்லை காய வைத்திருந்ததாகவும், அவன் பார்க்காத சமயம், மழை திடீரென பெய்ய, சிவன்(நெல்லையப்பர்), நெல் மேல் நீர் படாமல் காத்தார் எனவும், அதனால், அவருக்கு நெல்லையப்பர், என்றும், அந்த இடத்துக்கு திரு + நெல் + வேலி என்றும் பெயர்.
[தொகு] இரட்டை நகரங்கள்
திருநெல்வேலியும் பாளையங்கோட்டையும் இரட்டை நகரங்கள் எனப்படுகின்றன. பாளையங்கோட்டை கல்விநிலையங்களுக்குப் பெயர்பெற்றது. இது தென்னிந்தியாவின் ஆக்ஸ்ஃபோர்டு என்றழைக்கப்படுகிறது. பாளையம்கோட்டைச் சிறையும் மிகவும் புகழ்பெற்றது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது பல சுதந்திரப்போராட்ட வீரர்கள் இங்குதான் அடைக்கப்பட்டிருந்தனர்.[தொகு] தமிழின் தோற்றம்
தமிழ் மொழியானது பொதிகை மலையில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் என்ற சிற்றூரில் உள்ளது. இந்து பழங்கதைகளின் படி சிவன் வியாசரையும் அகத்தியரையும் சமஸ்கிருதத்தையும் தமிழையும் உருவாக்க அனுப்பினார். அகத்தியர் பாபநாசம் வந்து தமிழை உருவாக்கினார்.திருநெல்வேலி ம்ற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பேசப்படும் தமிழ் நெல்லை தமிழ் என்று வழங்கப்படுகிறது.[தொகு] திருநெல்வேலி அல்வா
திருநெல்வேலி என்றவுடன் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது "திருநெல்வேலி அல்வா"தான். இந்த ஊரின் அல்வாவின் சுவையே தனிதான். அதிலும் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவிற்கு இருக்கும் ருசியே தனிதான். திருநெல்வேலிக்கு வருபவர்கள் அல்வா வாங்காமல் திரும்ப மாட்டார்கள் என்பது தனிச் சிறப்பு.[தொகு] முக்கிய இடங்கள்
தாமிரபரணி ஆறுநெல்லையில் பாயும் புகழ்பெற்ற தாமிரபரணி ஆறு அகத்திய மலையில் உற்பத்தியாகிறது. இந்த ஆற்றின் குறுக்கே பாபநாசத்தில் அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டில் பல்வேறு திரைப்படப் படப்பிடிப்புகள் நடந்துள்ளன. நெல்லையில் பாயும் இந்தத் தாமிரபரணி ஆறு சுற்றியுள்ள பல பகுதிகளையும் செழிக்க வைக்கிறது.
[தொகு] யாழ்ப்பாணத்திலும் ஒரு திருநெல்வேலி
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில், யாழ்ப்பாண நகருக்கு வடக்கே ஏறத்தாழ இரண்டரைக் கிலோ மீற்றர் தூரத்தில் திருநெல்வேலி என்னும் கிராமம் அமைந்துள்ளது. இங்கே தான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்(University of Jaffna) அமைந்துள்ளது.Labels: District History
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home