Friday, 18 November 2011

சேலம்

சேலம்


சேலம்
—  நகரம்  —


சேலம்
இருப்பிடம்: சேலம்
, தமிழ் நாடு , இந்தியா
அமைவிடம் 11.65°′″N 78.16°′″Eஅமைவு: 11.65°′″N 78.16°′″E
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் சேலம்
ஆளுநர் கொனியேட்டி ரோசையா
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா
நகராட்சித் தந்தை சவுண்டப்பன்
மக்கள் தொகை
அடர்த்தி
6,97,061 (2001)
7,631 /km2 (19 /sq mi)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு
உயரம்
91.34 ச.கி.மீs (35.27 sq mi)
278 மீட்டர் (910 அடி)
இணையதளம் www.salemcorporation.gov.in
சேலம் (ஆங்கிலம்:Salem), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். தமிழகத்தின் 5வது பெரிய நகரான சேலம் தமிழகத்தின் வட மத்திய பகுதியில் அமைந்துள்ளது. கொங்கு மண்டலத்தின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள சேலம் ஒரு வணிக மையம் ஆகும். சேலம் மாம்பழத்திற்கு பெயர் பெற்ற இடம். இதனால் இதனை "மாங்கனி நகரம்" என்றும் அழைப்பார்கள்.

பொருளடக்கம்

 [மறை

[தொகு] புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 11.65° N 78.17° E ஆகும்.[1] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 278 மீட்டர் (912 அடி) உயரத்தில் இருக்கின்றது. சேர்வராயன் மலைத்தொடரில் உற்பத்தியாகும் திருமணிமுத்தாறு சேலம் நகரின் ஊடாக செல்கிறது. சேர்வராயன் மலைத்தொடரில் அமைந்துள்ள ஏற்காடு சேலத்திலிருந்து 35 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. நாம மலை, ஊத்து மலை, கஞ்ச மலை, சாமியார் குன்று ஆகியவை சேலத்தை சுற்றி அமைந்த சில மலைகள்.

ஏற்காட்டிலிருந்து தெரியும் இரவில் ஒளிரும் சேலம்

சேலம்

[தொகு] மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 693,236 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். சேலம் மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சேலம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். சேலத்தின் மக்கள் தொகையில் குறிப்பிடத் தக்க அளவு கன்னடம் பேசும் மக்களும், சௌராஷ்டிர மொழி பேசுவோரும் உள்ளனர்.

[தொகு] வரலாறு

சேலம் என்ற சொல் 'சைலம்' மற்றும் 'ஷைல்ய' என்னும் சொல்லில் இருந்து பிறந்ததாக கூறப்படுகிறது. 'சேலம்' என்றால் 'மலைகள் சூழ்ந்த இடம்' என்று பொருள்.
இவ்வூரில் உள்ள மலையைச் சேரன் ஆண்டதால் சேர்வராயன் மலை ஆயிற்று; அது போலச் 'சேரலம்' என்பது 'சேலம்' ஆயிற்று என்றும் கூறுவர். ஏத்தாப்பூர் செப்பேடு இவ்வூரைச் "சாலிய சேரமண்டலம்" எனக் குறிப்பிடுகிறது. எனவே, சேரலம் என்னும் பெயரே காலப்போக்கில் திரிந்து சேலம் என வழங்கப்பட்டது. சேலம் மற்றும் கோவைப் பகுதிகள் நீண்ட காலம் மதுரை நாயக்கர்களின் கட்டுப்பாடில் இருந்தது. பிற்பாடு 1768 இல் மதுரை-மைசூர் போரில் சேலம் ஹைதர் அலி கட்டுப்பாட்டுக்கு சென்றது. பின்பு 1799 இல் லார்டு க்லைவ் கைப்பற்றி சங்ககிரி துர்கத்தை தலைமை இடமாக கொண்டு வெள்ளையர்கள் அரசாங்கம் சார்பில் நிர்வாகம் நடந்தது. ஆங்கிலேயர்களின் இராணுவ படைத்தளமாக சேலம் விளங்கிற்று. அவர்கள் கட்டிய கோட்டை இங்குள்ளது, கோட்டைப்பகுதி தற்போது நகரின் மைய பகுதியாக உள்ளது.
சி.வி. ராஜகோபாலசாரியார், சி. விஜயராகவாச்சாரி, ராமசாமி உடையார் ஆகியோர் இம்மாநகரத்தை சேர்ந்தவர்கள்.

[தொகு] பொருளாதாரம்

  • சேலம் பல்வேறு கனிமவளங்கள் நிறைந்த இடம். இங்கு கிடைக்கும் இரும்பு தாதுவை பயன்படுத்தி இந்திய நடுவன் அரசின் செயில் (SAIL) நிறுவனம் சேலம் இரும்பாலையை அமைத்துள்ளது, இது தமிழ்நாட்டின் ஒரே உருக்கு ஆலை ஆகும்.
  • இந்தியாவில் மாக்னசைட் தாது பெருமளவு கிடைக்கும் இடங்களில் சேலமும் ஒன்று. டால்மியா & தமிழக அரசின் டான்மாங் (TANMAG - TAMILNADU MAGNESITE LIMITED) நிறுவனங்கள் மாக்னசைட் சுரங்கங்களை இங்கு அமைத்துள்ளன.

ஏற்காட்டிலிருந்து தெரியும் டான்மாங் மாக்னசைட் சுரங்கம்
  • அதிக அளவில் வெள்ளி ஆபரணங்கள் செய்யும் தொழில் இங்கு நடைபெறுகிறது.
  • இது தவிர நூற்பாலை, வாகன உதிரிபாக ஆலை, சேகோ (சவ்வரிசி) ஆலை ஆகியவையும் உள்ளன.
கோழிப் பண்ணைகளும் அதிக அளவில் உள்ளன. இங்கு உள்ள லீ-பஜார், மஞ்சள், கடலை, தேங்காய், அரிசி போன்ற வேளாண்மை சார்ந்த சந்தைக்குப் பெயர் பெற்றது. பொதுவாக மாம்பழத்துக்கு பெயர் போன நகரம் என்பதால் இங்கு அதுவும் பிரசித்தி.
  • விரைவில் இங்கு ஒரு தகவல் தொழில் நுட்ப பூங்கா அமையவிருக்கிறது.
  • சேர்வராயன் மலைத்தொடரில் அமைந்துள்ள ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காடு சேலத்திலிருந்து 35 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

[தொகு] ஆன்மீக தலங்கள்

சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் கோவில்களை காணலாம். இங்கு உள்ள முக்கிய கோயில்கள் சில,
ஆடி மாதத்தில் சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா நடக்கும் அதே சமயத்தில் சேலம் செவ்வாய்ப் பேட்டை மாரியம்மன் கோவிலின் திருவிழாவும், சேலம் அன்னதானப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவும், சேலம் குகை மாரியம்மன் காளியம்மன் கோவில் திருவிழாவும், சேலம் அம்மாப்பேட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவும் நடக்கும்.
  • கந்தாஸ்ரமம்
  • சித்தர் கோவில்- இது சித்தர்கள் கட்டிய கோவில் என்றும், இந்த கோவில் அமைந்து உள்ள கஞ்சமலையில் சித்தர்கள் இன்றும் வசிப்பதாக இப்பகுதி மக்கள் நம்புகிறார்கள்.இங்கு ஊற்றுகளில் இருந்து வரும் தண்ணீரை உட் கொண்டால் பல நோய்கள் குணமாவதாக மக்கள் நம்புகின்றனர்
  • ஊத்துமலை - சேலத்தில் உள்ள ஆன்மீக தளங்களில் இதுவும் ஒன்று. இது சேலம் மாநகரத்தின் தெற்கு பகுதியில் அமைந்து உள்ளது. இங்கு அமைந்துள்ள முருகன் கோவில் புகழ் பெற்றது. மேலும் இங்கு சிவபெருமான், பெருமாள் மற்றும் சௌடேஸ்வரி அம்மன் கோவில்களும் அமைந்துள்ளன. இங்குள்ள கிணறுகள் எவ்வளவு நீர் இறைத்தாலும் வற்றாதவை.
  • குமரகிரி

[தொகு] கல்வி

கடந்த சில ஆண்டுகளாக சேலம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் பெருமளவில் கல்வி நிறுவனங்கள் வளர்ந்து உள்ளது. பெரியார் பல்கலைக்கழகம் இங்கு அமைந்துள்ளது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட கல்லூரிகள் இப் பல்கலைகழகத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன. 2 மருத்துவ கல்லூரிகள் இங்கு உள்ளன. அரசு பொறியியல் கல்லூரி இங்குள்ளது. அனைத்து துறை சார்ந்த கல்லூரிகளும் இந்த பகுதியில் பெருமளவு அமைந்துள்ளது. தரமான பள்ளிகளும் பெருமளவில் உள்ளன.
அரசினர் பொறியியல் கல்லூரி

[தொகு] போக்குவரத்து

[தொகு] சாலை

சேலம் மாநகரம் சாலை போக்குவரத்தின் முக்கிய சந்திப்பு ஆகும். மூன்று முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் இங்கு கடக்கின்றன.
ஆகையால் சென்னை, கோவை, பெங்களூர், மதுரை, திருச்சி, கொச்சி, பாண்டிச்சேரி ஆகிய ஊர்களுக்கு இடையே ஆன போக்குவரத்துக்கு இது ஒரு முக்கிய சந்திப்பாகும்.

[தொகு] தொடருந்து

சேலம் சந்திப்பானது சென்னை-கோவை, மற்றும் கேரள மாநிலம் செல்லும் அனைத்து ரெயில்களின் முக்கிய சந்திப்பு. 2007 ஆம் ஆண்டு முதல் சேலத்தை தலைமை இடமாக கொண்டு தனி இரயில்வே கோட்டம் செயல்பட தொடங்கியுள்ளது. பாலக்காடு கோட்டத்தில் இருந்த தமிழக ரயில்வே பகுதிகள் இப்பொழுது சேலம் ரயில்வே கோட்டத்தில் சேர்க்கப் பட்டுள்ளது.

[தொகு] விமானம்


சேலம் வானூர்தி நிலையம்
சேலம் கமலாபுரத்தில் ஒரு விமானநிலையம் 1993 இல் அமைக்கபட்டது. பல வருடங்களாக நிறுத்தி வைக்கபட்டிருந்து விமான சேவை, இப்போது கிங் பிஷர் நிறுவனத்தால் வழங்கபடுகிறது.


சேலம் சிறப்பு


சேலம் மலைகள் சூழ்ந்து காணப்பட்டதால் சைலம் என்று அழைக்கப்பட்டு அது சேலம் என மருவியதாகவும், சேர நாட்டின் கிழக்கு எல்லையாக இருந்ததால், சேரலம் எனப்பட்டு, சேலம் என மருவியதாகவும், சமண சமயத்தின் முக்கிய தளமாக இருந்ததால், சைலம் என அழைக்கப்பட்டு சேலம் என மருவியதாகவும் என பல்வேறு காரணங்கள் சேலத்தின் பெயருக்கு காரணமாக தெரிவிக்கப்படுகிறது. இந்நகரைச் சுற்றி முழுவதும் மலைகள் அமைந்துள்ளது. இந்த ஊரின் வடக்குப் பகுதியில் நாகர்மலையும், மேற்குப் பகுதியில் காஞ்சனமலையும் அமைந்துள்ளது.

சேலத்திற்கு மாம்பழ நகரம் என்ற பெயரும் உண்டு. இந்நகரில் லாரி கட்டுமானப் பொருட்கள் தயாரிப்பு, பாக்ஸைட் தயாரிப்பு, நெசவுத் தொழில் போன்ற தொழில்கள் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது.வணிகத்துறையில் சிறந்து விளங்கும் சேலம் தமிழ்நாட்டின் இறக்குமதி ஏற்றுமதி வியாபாரத்தில் உயிர்நாடியாக விளங்குகிறது. புகழ்பெற்ற சேலம் உருக்காலை தற்போது தனியாரிடம் ஒப்படைக்கவும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. சேலத்தில் சாயத்தொழிற்சாலை, உணவுப்பொருட்கள் தயாரிப்புத் தொழிற்சாலைகளும் உள்ளன.


சேலம் சுற்றுலா

தாரமங்கலம் கைலாசநாதர் திருக்கோயில்:
Hotel image
இது ஒரே நேரத்தில் கட்டப்பட்ட கோயில் அல்ல. 10 ஆம் நூற்றாண்டிலேயே இதன் சில பகுதிகள் இருந்தன. 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டி முதலி அரச பரம்பரையினர் இந்தக் கோயிலை விரிவுபடுத்திக் கட்டியுள்ளனர். பிற்காலத்தில் மும்முடிச் சோழனும், சீயாழி மன்னனும் இந்தக் கோயிலைப் புதுப்பித்து திருவிழாக்களைக் கொண்டாடி வந்துள்ளனர். வணங்காமுடி மன்னர் காலத்தில்தான், இந்தக் கோயில் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலைச் சுற்றி 306 து164 அடி அளவுக்கு மிகப்பெரிய கல்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இது 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஆலயத்தின் ராஜகோபுரம் 90 அடி உயரத்தில் ஐந்து அடுக்குகளைக் கொண்டது. ஒரு பெரிய தேரைக் குதிரைகளும் யானைகளும் இழுத்துச் செல்வதைப் போன்ற தோற்றத்தில் இந்தக் கோபுரம் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆகஸ்டு-செப்டம்பர் மற்றும் பிப்ரவரி மார்ச் மாதங்களில் நுழைவு வாயில் கோபுரத்தின் வழியாக மாலை நேர வெயில் நுழைந்து கருவறையில் இருக்கும் சிவகாமி சமேதராக வீற்றிருக்கும் கைலாசநாதர் சிலை மீது விழும்.
சிறப்புகள் :மாசி 9,10,11 ஆகிய தேதிகளில் சூரிய ஒளி நந்தியின் கொம்பு வழியே சென்று சிவலிங்கத்தின் மீது மூன்றாம் பிறை போல் விழுகிறது. இதைக்காண அன்றைய தேதிகளில் கோயிலில் பக்தர்கள் வெள்ளம் அலை மோதும். ரதி சிலையிலிருந்து பார்த்தால் மன்மதன் தெரியும் வகையிலும், மன்மதன் சிலையிலிருந்து பார்த்தால் ரதி தெரியும்படியும் அமைந்த சிற்பம் சிறப்பானது.இத்தலத்தில் உள்ள கல் சங்கிலி, கல் தாமரை, சிங்கம் ஆகியவை சிற்பகலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் பவளக்கல் பட்டியக்கல் நிலை கோயிலின் நுழைவாயிலில் உள்ளது.பாதாள லிங்கம் : இத்தலத்திலேயே வெகு சிறப்பான சன்னதி இது. தலத்தின் கீழ்பகுதியில் ஒரு காற்று புக முடியாத அறைக்குள் இருக்கும் இந்து பாதாள லிங்கத்திற்கு பச்சை கற்பூரம் வைத்து செவ்வாய்க் கிழமை தோறும் அபிஷேகம் செய்தால் கல்யாண பாக்கியம், புத்திர பாக்கியம் மற்றும் தொழில் விருத்தி ஆகியவை கை கூடுகின்றன. ஜூரகேஸ்வரர் : இத்தலத்தில் உள்ள ஜூரகேஸ்வரர் 3 தலை, 3 கால்களோடு இருப்பது சிறப்பு. இவருக்கு மிளகு ரசம் வைத்து சாதம் படைத்து வடைமாலை சாத்தி அபிஷேகம் செய்தால் காய்ச்சல் மற்றும் தீராத வியாதிகள் குணமடைகின்றன.

ஏற்காடு
Hotel image
ஏற்காடு என்பது தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மலை ஊராகும். இது கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள சேர்வராயன் மலையில் அமைந்துள்ளது. ஏற்காடு கடல் மட்டத்திலிருந்து 5326 அடி (1623மீட்டர்) உயரத்தில் உள்ளது. இதை ஏழைகளின் ஊட்டி என்றும் அழைப்பார்கள். ஏரிக் காடு என்பதே ஏற்காடு என்று மருவி விட்டது. இது சேலத்திலிருந்து 36 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் 20 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.
19ம் நூற்றாண்டில் சேலத்தில் தங்கியிருந்த ஆங்கிலேயர்கள் ஏற்காட்டைக் கண்டறிந்தார்கள். சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் காக் பர்ன் இங்கு காபி செடி, ஆப்பிள் போன்ற பழ வகைகளை அறிமுகப்படுத்தினார். ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காடு நடுத்தர வர்க்க மக்களுக்கு ஒரு சொர்க்கமாகும். மரங்களின் நிழலும் தென்றலின் சுகமும் வெயிலின் தாக்கத்தையும் மறைத்துவிடும் சூழல் கொண்ட ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சுமார் 383 சதுர கிலோ மீட்டர் கொண்ட ஏற்காட்டில் இயற்கை எழில் மிகுந்த குன்றும் அதையொட்டி அமைந்துள்ள ஏரியும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளது. மேலும் இங்கு சிறுவர்கள் விளையாடி மகிழ பூங்காக்களும் இடம் பெற்றுள்ளன. இங்கு அருவியில் குளித்து மகிழ கிள்ளியூர் நீர்வீழ்ச்சி எனும் அருவி ஒன்றும் உள்ளது. ஏற்காடு ஏரியில் நிரம்பினால் இந்த நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டும். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5342 அடி உயரத்தில் உள்ள மலைக் கோவில் மிகவும் பழமையான, பிரசித்திப் பெற்ற கோயிலாகும். இங்குள்ள பக்கோடா முனை எனுமிடத்திலிருந்து பார்த்தால் கீழுள்ள பகுதி மிக அழகுடன் காட்சியளிக்கிறது. ஏப்ரல், மே மாதங்களில் இங்கு மலர்க்கண்காட்சி நடைபெறும். ஏற்காடு அடிவாரத்தில் குருவம்பட்டி உயிரியல் பூங்கா உள்ளது. ஏற்காடு செல்வோர் இங்கும் சென்று வரலாம். ஏற்காடு செல்வோர் பஸ் அல்லது ரயில் மூலம் சேலம் வந்து அங்கிருந்து மலைக்குச் செல்லும் விசேஷப் பேருந்தில் பயணம் செய்யலாம். 
ஊட்டி, கொடைக்கானல் சென்று கோடைக் காலத்தை கழிக்க வசதியில்லாத ஏழை எளிய நடுத்தர மக்கள் ஏற்காட்டில் மிகக் குறைந்த செலவில் நிறைந்த மகிழ்ச்சியைப் பெறலாம்.ஏற்காடு

மேட்டூர் அணைக்கட்டு:
Hotel image
தென்னிந்தியாவில் உள்ள மிகப்பெரிய அணைகளில் இதுவும் ஒன்று. 1934 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணைக்கட்டின் மொத்த நீளம் 1700 மீட்டர்கள் ஆகும். இங்குள்ள மேட்டுர் நீர்மின் உற்பத்தி நிலையம் மிகவும் பெரியதாகும். இங்குள்ள பூங்கா, மலைப்பகுதி மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாகத் திகழ்கிறது.




Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home