கேரளம்
கேரளம்http://tawp.in/r/1qm
கேரளா കേരളം | |||
கடவுளின் நாடு -- ദൈവത്തിന്റെ സ്വന്തം നാട് | |||
— மாநிலம் — | |||
| |||
இருப்பிடம்: கேரளா , இந்தியா | |||
அமைவிடம் | அமைவு: | ||
நாடு | ![]() | ||
பகுதி | தென்னிந்தியா | ||
மாநிலம் | கேரளா | ||
மாவட்டங்கள் | 14 | ||
நிறுவப்பட்ட நாள் | நவம்பர் 1, 1956 | ||
தலைநகரம் | திருவனந்தபுரம் | ||
மிகப்பெரிய நகரம் | திருவனந்தபுரம் | ||
ஆளுநர் | R.S. காவாய்[1] | ||
முதலமைச்சர் | உம்மன் சாண்டி[2] | ||
ஆளுனர் | கவாய் | ||
முதலமைச்சர் | உம்மன் சாண்டி[3] | ||
சட்டமன்றம் (தொகுதிகள்) | ஓரவை (141 தொகுதிகள்: 140 elected, 1 nominated) | ||
மக்கள் தொகை • அடர்த்தி | 31[4] (12th) (2001) • 819 /km2 (2 /sq mi) | ||
ம. வ. சு (2005) | ![]() | ||
கல்வியறிவு | 94.59[5][6]% (1வது) | ||
மொழிகள் | மலையாளம் | ||
---|---|---|---|
நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) | ||
பரப்பளவு | 38863 கிமீ2 (15005 சதுர மைல்) | ||
ISO 3166-2 | IN-KL | ||
![]() | |||
இணையதளம் | kerala.gov.in |
கேரளா (Kerala, ['keːɹəˌlə]?·i (ஆங்கிலமாக்கப்பட்டது) அல்லது [ˈkeːɾəˌɭəm] (உள்ளூர்); மலையாளம்: കേരളം, — Kēraḷaṁ) இந்தியாவின் தென்மாநிலங்களுள் ஒன்று. கேரா என்ற சொல் தேங்காயைக் குறிக்கும். இங்கு தென்னை மரங்கள் அதிகமாக காணப்படுவதால் அதனைத் தருவி கேரளம் என அழைக்கப்படுகிறது. இது கிழக்கில் தமிழ் நாட்டையும், வடக்கில் கர்நாடகத்தையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. மேற்கில் அரபுக் கடல் உள்ளது. மலையாளம் கேரளாவின் முதன்மையான மொழியாகும். தமிழ் பேசுவோரும் அதிகமாக காணப்படுகினறனர். கேரளத்தின் தலைநகரம் திருவனந்தபுரம். பிற குறிப்பிடத்தக்க நகரங்கள் கொச்சி, திருச்சூர் மற்றும் கோட்டயம் ஆகும். இந்திய மாநிலங்களில் கல்வியறிவு விகிதத்தில் கேரளம் முதலிடம் வகிக்கிறது.
பொருளடக்கம்[மறை] |
[தொகு] பெயர் காரணம்
கேரளா என்ற வார்த்தை தமிழ் வார்த்தையான “சேரளம்” (மலைச் சரிவு) அல்லது சேர நாடு என்பதிலிருந்து தொன்றியது என்பது அறிஞர்களின் கூற்று. இன்றைய கேரளா வரலாற்று காலத்தில் “சேர நாடு” என்று அழைக்கப்பட்டு வந்தது. 3ஆம் நூற்றாண்டு பேரரசர் அசோகரின் கல்வெட்டில் கேரளா - “கேரளபுத்திரர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ரோமானிய வணிகன் பெரிபுளீஸின் நிலவரைபடத்தில் இன்றைய கேரளப் பகுதியை சேரபுத்ரா என்று குறிப்பிடுகின்றார். கேரள மக்கள் மலையாளிகள் என்று அழைக்கப்படுகின்றனர். மலையில் (மேற்கு தொடர்ச்சி மலைகள்) வாழ்பவர்கள் என்பது அதன் பொருள் ஆகும்.[தொகு] சிறப்புகள்
- 5 ஏப்ரல் 1957ல் ஜனநாயக முறைப்படி, ஆசியாவிலேயே முதன் முதலாக கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்த முதல் மாநிலம்
- ஆதி சங்கரர் (கி.பி.788-820) பிறந்த இடம் காலடி
- இந்திய செவ்வியல் நடனவடிவம் "கதகளி"யின் பிறப்பிடம்
- ரப்பர் உற்பத்தியில் இந்தியாவின் முன்னணி மாநிலம்
- இந்தியாவின் நறுமணத் தோட்டம்
- களரிப்பயிற்று தற்காப்புக் கலையின் பிறப்பிடம்
[தொகு] புவியமைப்பு
பரப்பளவு:38,863 km2 (15,005 sq mi)கிழக்கே மேற்குத் தொடர்ச்சி மலைகள்; மேற்கில் அரபிக் கடல்; தென் கிழக்கில் தமிழ்நாடு; வட கிழக்கில் கர்நாடகம்.
ஆறுகள்: நெய்யாறு, பம்பை, மணிமலை, பெரியாறு, பாரதப்புழை, சித்தாறு மற்றும் மூவாற்றுப்புழை ஆகியவை கேரளத்தின் முக்கிய ஆறுகள்.
[தொகு] வரலாறு
பரசுராமரின் கோடரி கடலைப் பிளந்த தால் தோன்றிய நாடு கேரளம் என்பது புராணக் கற்பனை.இதனை பார்க்கவ சேத்திரம் என்றும் பரசுராம சேத்திரம் என்றும் வழங்குகின்றனர்.[7]போர்த்துக்கீசியர், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என பல ஐரோப்பியர் கேரளத்தில் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டினர். 1947வாக்கில் கேரளம் திருவிதாங்கூர், கொச்சி மற்றும் மலபார் என மூன்று சமஸ்தானங்களாக இருந்தது.
மலபார் சீரமைப்புச் சட்டம் 1956ன் படி, திருவிதாங்கூர், கொச்சி மற்றும் மலபார் பகுதிகள் இணைக்கப்பட்டு, நவம்பர் 1956ல் இன்றைய கேரளம் உதயமானது.
[தொகு] அரசியல்
[தொகு] பொருளாதாரம்
விவசாயம் முக்கிய தொழில். உணவுப் பொருள் சாகுபடியை விட பணப்பயிர் சாகுபடி அதிகரித்து வருகிறது. பாரம்பரிய தொழில்களான கைத்தறி, கயிறு, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு போன்ற தொழில்களும் சிறப்பாக நடைபெறுகிறது.[தொகு] மாவட்டங்கள்
- காசர்கோடு
- கண்ணூர்
- வயநாடு
- கோழிக்கோடு
- மலைப்புறம்
- பாலக்காடு
- திருச்சூர்
- எர்ணாகுளம்
- இடுக்கி
- ஆலப்புழா
- கோட்டயம்
- பத்தனம்திட்டா
- கொல்லம்
- திருவனந்தபுரம்
[தொகு] மக்கள்
சமயம் | பின்பற்றுவோர் | விழுக்காடு |
---|---|---|
மொத்தம் | 31,841,374 | 100% |
இந்துகள் | 17,883,449 | 56.16% |
இசுலாமியர் | 7,863,842 | 24.70% |
கிறித்தவர் | 6,057,427 | 19.02% |
சீக்கியர் | 2,762 | 0.01% |
பௌத்தர் | 2,027 | 0.01% |
சமணர் | 4,528 | 0.01% |
ஏனைய | 2,256 | 0.01% |
குறிப்பிடாதோர் | 25,083 | 0.08% |
[தொகு] கலைகள்
கூடியாட்டம், கதகளி, கேரள நடனம், மோகினியாட்டம், தெய்யம், துள்ளல் ஆகியவை கேரளத்தின் நாட்டிய வகைகளாகும். வர்மக்கலை, களரி போன்ற தற்காப்புக் கலைகளும் கேரளத்திலிருந்து தோன்றியவையே.[தொகு] விழாக்கள்
ஓணம் மற்றும் விஷு கேரளத்தின் முக்கிய பண்டிகைகளாகும். கிறிஸ்துமஸும் ரமலான் பெருநாளும் இங்கு கொண்டாட படுகிறது.Labels: State History
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home