ஆந்திரப் பிரதேசம்
ஆந்திரப் பிரதேசம் ఆంధ్ర ప్రదేశ్ - ஆந்திரா | |||
— மாநிலம் — | |||
| |||
அமைவிடம் | |||
நாடு | ![]() | ||
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் | ||
மாவட்டங்கள் | 23 | ||
நிறுவப்பட்ட நாள் | நவம்பர் 1, 1956 | ||
தலைநகரம் | ஐதராபாத் | ||
ஆளுநர் | [1] | ||
முதலமைச்சர் | நல்லாரி கிரண் குமார் ரெட்டி[2] | ||
ஆளுநர் | E. S. L. நரசிம்மன் | ||
முதலமைச்சர் | நல்லாரி கிரண் குமார் ரெட்டி[3] | ||
சட்டமன்றம் (தொகுதிகள்) | ஈரவை (294 + 90) | ||
மக்கள் தொகை • அடர்த்தி | 76 (5th) (2002) • 277 /km2 (717 /sq mi) | ||
ம. வ. சு (2005) | ![]() | ||
கல்வியறிவு | 72.5% (13வது) | ||
மொழிகள் | தெலுங்கு, உருது | ||
---|---|---|---|
நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) | ||
பரப்பளவு | 275045 கிமீ2 (106195 சதுர மைல்) | ||
ISO 3166-2 | IN-AP | ||
இணையதளம் | www.ap.gov.in |
ஆந்திரப் பிரதேசம் இந்தியாவின் தென்மாநிலங்களுள் ஒன்று. இதன் தலைநகரம் ஐதராபாத் ஆகும். விஜயவாடா, விசாகப்பட்டிணம் ஆகியன இம்மாநிலத்திலுள்ள ஏனைய பெரிய நகரங்களாகும். இங்குள்ள பெரும்பாலான மக்கள் பேசும் மொழி தெலுங்கு. பரப்பளவு அடிப்படையில் இது இந்தியாவின் நாலாவது பெரிய மாநிலமாகும்.
பொருளடக்கம்[மறை] |
[தொகு] புவியமைப்பு
ஆந்திரப் பிரதேசத்தின் வடக்கில் மகாராஷ்டிரம், சத்தீஸ்கர், ஒரிசா ஆகிய மாநிலங்களும், கிழக்கில் வங்காள விரிகுடாவும், தெற்கில் தமிழ் நாடும், மேற்கில் கர்நாடகமும் அமைந்துள்ளன. தென் மாநிலங்களில் மிகப்பெரிய மாநிலமான ஆந்திரப் பிரதேசம், மக்கள் தொகை அடிப்படையில் இந்தியாவின் ஐந்தாவது பெரிய மாநிலமாகும். இந்திய மாநிலங்களில் இது இரண்டாவது நீண்ட கடற்கரையை கொண்டுள்ளது. கோதாவரி, கிருஷ்ணா ஆகிய ஆறுகள் ஆந்திரப் பிரதேசம் வழியாகப் பாய்கின்றன. அவற்றின் கழிமுகங்கள் காரணமாக அரிசி உற்பத்தியில் இம்மாநிலம் சிறந்து விளங்குகிறது.1 நவம்பர் 1956 அன்று மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டத்தின் படி தெலுங்கு பேசும் ஐதராபாத் மாநிலமும் சென்னை மாகாணத்தின் தெலுங்கு பேசும் பகுதியும் இணைந்து ஆந்திரப் பிரதேசம் என்ற புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. மொழியின் அடிப்படையில் அமைக்கப்பட்ட முதல் மாநிலம் இதுவே. தெலுங்கானா ஐதராபாத் மாநிலத்தின் பகுதியாக இருந்தது, இராயலசீமை, கடற்கரை ஆந்திரா சென்னை மாகாணத்தின் பகுதிகளாக இருந்தது. எனவே இம்மாநிலம் தெலுங்கானா, இராயலசீமை, கடற்கரை ஆந்திரா என்ற மூன்று பகுதிகளை உடையது.
[தொகு] மாவட்டங்கள்
- அதிலாபாத்
- அனந்தபூர்
- சித்தூர்
- கடப்பா
- கிழக்கு கோதாவரி
- மேற்கு கோதாவரி
- குண்டூர்
- ஹைதராபாத்
- கரீம்நகர்
- கம்மம்
- கிருஷ்ணா
- கர்னூல்
- மகபூப்நகர்
- மேதக்
- நல்கொண்டா
- நெல்லூர்
- நிஜாமாபாத்
- பிரகாசம்
- ரங்காரெட்டி
- ஸ்ரீகாகுளம்
- விசாகப்பட்டிணம்
- விஜயநகரம்
- வாரங்கல்
[தொகு] பொருளாதாரம்
விவசாயமே ஆந்திரப் பிரதேசத்தில் அதிகமாக பழக்கத்திலுள்ள தொழிலாகும். அரிசி, புகையிலை, பருத்தி, மிளகாய், கரும்பு ஆகியவை இங்கு விளைவிக்கப்படுகின்றது. கடந்த சில ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்பத்திற்கு ஆந்திரப் பிரதேசத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.[தொகு] அரசியல்
ஆந்திரப் பிரதேச சட்டசபைக்கு கீழவையும் மேலவையும் உண்டு. இதில் கீழவை உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள். கீழவைக்கு 294 இடங்களும் மேலவைக்கு 90 இடங்களும் உண்டு. மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களில் 31 உறுப்பினர்கள் உள்ளாச்சி அமைப்புகள் மூலமும், 31 உறுப்பினர்கள் கீழவை உறுப்பினர்களாலும் 8 உறுப்பினர்கள் ஆசிரியர்களாலும் 8 உறுப்பினரகள் பட்டதாரிகளாலும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 12 உறுப்பினர்கள் ஆளுனரால் நியமிக்கப்படுவார்கள். இந்திய மக்களவைக்கு இம்மாநிலத்திற்கு 42 உறுப்பினர்கள் உண்டு, இந்திய மேலவைக்கு 18 உறுப்பினர்கள் உண்டு. 1982 வரை இந்திய தேசிய காங்கிரசு கட்சியை சேர்ந்தவர்களே முதலமைச்சர்களாக இருந்தனர். 1983ல் தெலுங்கு தேசம் கட்சியின் என். டி. ராமராவ் முதல்வராக அமர்ந்தார். 1982 மார்ச் மாதம் தெலுங்கு தேசத்தை ராமராவ் உருவாக்கினார்.[தொகு] மக்கள்
சமயம் | பின்பற்றுவோர் | விழுக்காடு |
---|---|---|
மொத்தம் | 76,210,007 | 100% |
இந்துகள் | 67,836,651 | 89.01% |
இசுலாமியர் | 6,986,856 | 9.17% |
கிறித்தவர் | 1,181,917 | 1.55% |
சீக்கியர் | 30,998 | 0.04% |
பௌத்தர் | 32,037 | 0.04% |
சமணர் | 41,846 | 0.05% |
ஏனைய | 4,768 | 0.01% |
குறிப்பிடாதோர் | 94,934 | 0.12% |
[தொகு] கலாசாரம்
தெலுங்கு ஆந்திரப் பிரதேசத்தின் முக்கிய மொழியும், அதிகாரப்பூர்வ மொழியும் ஆகும். கர்நாடக சங்கீதத்தில் தெலுங்கு மொழி முக்கியப் பங்கு வகிக்கிறது. தெலுங்கு ஆண்டுப்பிறப்பான உகாதி, ஏப்ரல் மாதம் கொண்டாடப்படுகிறது. குச்சிப்புடி, ஆந்திரத்தின் பாரம்பரிய நாட்டிய வகையாகும்.ஹைதராபாத்தை மையமாகக் கொண்ட தெலுங்கு திரைப்படத் துறை, இந்தியாவில் மூன்றாம் பெரிய திரைப்படத்துறையாகும்.
ஆந்திர உணவு வகைகள் காரம் நிறைந்தவை.
Labels: State History
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home